தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

விரைவில் அரசியல் கட்சி தொடங்கும் ரஜினிகாந்த்..?

மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை

தர்பார் படம் வெளியாகி உள்ள நிலையில் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்து எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிடுவேன் என்று தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களை அவர் புறக்கணித்த போதும் சட்டமன்ற தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தி உள்ளார்.

இந்த கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே இருந்துள்ளனர். கட்சி தொடங்குவதற்கான பணி குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் அவர்களிடம் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகும் வகையில் இந்தாண்டு கட்சி தொடங்குவதற்கான ஆலோசனையும் இந்த கூட்டத்தில் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டாலினுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு நீக்கம் -வைகோ கண்டனம்

ஐ.நாவை எதிர்கொள்ள நட்பு நாடுகளின் ஆதரவைத் திரட்டுகின்றது இலங்கை!

Tags
Show More

Related Articles

Back to top button
Close