Breaking News

வெள்ளை வான் விவகாரம்: ராஜித மீண்டும் மனு!

வௌ்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன, கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் திருத்தப்பட்ட முன் பிணை மனுவை மீண்டும் தாக்கல் செய்துள்ளார்.

கொழும்பு பிரதம நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட முன்பிணை மனு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வௌ்ளை வான் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் முன்னெடுக்கும் விசாரணையின் மத்தியில் பிணை வழங்கமுடியாத குற்றச்சாட்டு தொடர்பில் தம்மைக் கைதுசெய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ராஜித சேனாரத்ன மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், எந்தக் குற்றத்திற்காக தம்மைக் கைது செய்வார்கள் என்பது தொடர்பில் மனுதாரர், முன் பிணை மனுவில் குறிப்பிடவில்லை எனத் தெரிவித்த கொழும்பு பிரதம நீதிவான் மனுவை நிராகரிப்பதாக அறிவித்தார்.

இந்தநிலையில், ராஜித சேனாரத்ன கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் திருத்தப்பட்ட முன் பிணை மனுவை மீண்டும் தாக்கல் செய்துள்ளார்.

பிணைச் சட்டத்தின் 21ஆவது சரத்துக்கிணங்க பிணை மனுவொன்றைத் தாக்கல் செய்பவர் எந்தக் குற்றத்துக்காக பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதைத் தெளிவாக குறிப்பிட வேண்டும் என நீதிவான் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About விடுதலை

Check Also

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை …