இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

ரஞ்சன் மீண்டும் கைது!

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க கொழும்பு குற்றத் தடுப்புப் பொலிஸாரால் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நுகேகொட நீதிமன்றத்தின் பிடியாணை உத்தரவுக்கமைய இன்று மாலை 6 மணியளவில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

அரசமைப்பின் 111 ஏ (2) பிரிவின் கீழ் நீதித்துறை நடவடிக்கைகளில் தலையிட்டார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரைக் கைதுசெய்து நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு கொழும்பு குற்றத் தடுப்புப் பொலிஸாருக்கு சட்டமா அதிபர் இன்று பிற்பகல் பணிப்புரை வழங்கியிருந்தார்.

அதனடிப்படையில் நுகேகொட நீதிவான் நீதிமன்றத்தில் பிடியாணை உத்தரவைப் பெற்று ரஞ்சன் ராமநாயக்கவை அவரது நாடாளுமன்ற உறுப்பினருக்கான இல்லத்தில் வைத்து கொழும்பு குற்றத் தடுப்புப் பொலிஸார் இன்று மாலை கைதுசெய்தனர்.

ஏற்கனவே அனுமதிப் பத்திரம் காலாவதியான கைத்துப்பாக்கி, கைத்துப்பாக்கி ரவைகள் மற்றும் சில சட்டவிரோதப் பொருட்கள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த 04 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க மறுநாள் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பதுடன் வெளிநாடு செல்லத் தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

Tags
Show More

Related Articles

Back to top button
Close