இந்தியா செய்திகள்முக்கிய செய்திகள்

போரை எதிர்கொள்ள தயார் – இந்திய ராணுவ தளபதி !

நாட்டில் ஒட்டுமொத்த பாதுகாப்புத் துறையும் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் தெரிவித்துள்ளார்.

இன்று டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய ராணுவ தளபதி கூறியதாவது :
எதிர்காலப் போர்களுக்கு ஏற்ப முக்கியத்துவன்ம் கொடுத்து ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம்.

எந்த நேரத்தில் போர் வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். எண்ணிக்கை என்பது முக்கியமல்ல; தரம் தான் எங்களின் தாரக மந்திரமாக உள்ளது.

பணியாளர்களுக்கான தலைவர் மற்றும் ராணுவ விவகாரங்களுக்கான துறை அமைப்பது பெரிய நடவடிக்கையாகும். இந்த முயற்சி நிச்சயம் வெற்றி பெரும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய அரசியலமைப்பிற்கு நாங்கள் விசுவாசமாக இருக்கிறோம்.பூஞ்ச் பகுதியில் பாக்கிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 2 பேர் கொல்லப்பட்டனர்.

இனிமேல் இதுபோன்ற செயல்களை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். முன்பு இருந்ததை விட தற்போது இந்திய ராணுவம் பலமடங்கு பாதுகாப்பாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிராக கூடுதல் பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா

Tags
Show More

Related Articles

Back to top button
Close