இந்தியா செய்திகள்முக்கிய செய்திகள்

இந்த வாய்ப்புக்காக வேண்டாத நாளில்லை…! பவன் ஜலாத்

இந்த வாய்ப்புக்காக வேண்டாத நாளில்லை...! நால்வரை தூக்கிலிட இருக்கும் பவன் ஜலாத் சொல்கிறார்

”எனது மகளின் திருமணத்திற்கு பணம் தேவைப்படுகிறது; கடன் கழுத்தை நெறிக்கிறது” என்று டெல்லி நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நால்வரை தூக்கிலிட நியமிக்கப்பட்டுள்ள பவன் ஜலாத் கூறியுள்ளார்.

டெல்லியில் 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பின்னர், சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்ட மாணவி உயிரிழந்தார். நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் ஒருவர் சிறார் என்பதால், குறைந்தபட்ச தண்டனையுடன் விடுதலை செய்யப்பட்டார்.

ஒருவர் திஹார் சிறையில் தற்கொலை செய்துகொள்ள மற்ற நால்வரும் சிறையில் உள்ளனர். கருணை மனு, சீராய்வு மனுக்கள் என்று அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட,

நால்வருக்கும் தூக்கு தண்டனைக்கான வாரண்டை பாட்டியாலா நீதிமன்றம் கடந்த 7-ம் தேதி பிறப்பித்தது. அதில் முகேஷ் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (31) ஆகிய நான்கு பேரையும் வரும் 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிட வேண்டும் என நீதிமன்றம் வாரண்டில் தெரிவித்துள்ளது.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் வரும் 22 ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிடப்பட உள்ள நிலையில் அவர்களை தூக்கிடுவதற்காக மீரட்டை சேர்ந்த பவன் ஜலாத் என்ற நபர் வரவழைக்கப்படுகிறார்.

பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் உள்ளிட்ட போராட்ட வீரர்களை லாகூர் சிறையில் ஜலாத்தின் தாத்தா தான் தூக்கில் போட்டுள்ளார். தூக்கில் போடும் பணியில் 3வது தலைமுறையாக ஜலாத் உள்ள நிலையில் அவருக்கு இதுவே முதல் பணியாக வழங்கப்பட்டுள்ளது. நிர்பயா வழக்கில் இந்த தண்டனையை நிறைவேற்றுதன் மூலம் சமூகத்தில் ஒரு வித மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

குற்றவாளிகள் நால்வர்

பொதுவாக தூக்குத்தண்டனையை நிறைவேற்ற சிறைகளில் நிரந்தரப் பணியாளர் என்று யாரும் கிடையாது. பரம்பரை, பரம்பரையாக இந்த தொழிலை மேற்கொண்டவர்களே வரவழைக்கப்படுவார்கள்.

தமிழில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான புறம்போக்கு என்ற படத்தை பார்த்திருந்தால், உங்களுக்கு புரிந்திருக்கும்.இந்த நிலையில், நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட தயாராகி வருகிறார் 57 வயதான பவன் ஜலாத். ”இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்ததும் நான் மகிழ்ச்சியில் அழுதேவிட்டேன்.

திகார் சிறையில் இருக்கும் நால்வரையும் நான் தூக்கிலிட்டால், ஒருவருக்கு ரூ.25 ஆயிரம் வீதம் எனக்கு அரசு சார்பில் ஒரு லட்சம் வழங்கப்படும். இந்த பணம் எனக்குத் தேவை, எனது மகளின் திருமணத்துக்காக பணம் தேவைப்படுகிறது” என்கிறார் அவர்.

”நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான நபரைத் தேடி வருவதாக செய்திகளைப் பார்க்கும்போதெல்லாம் அந்த வாய்ப்பை எனக்கு வழங்க வேண்டும் என்று நான் இறைவனை பிரார்த்தித்தபடி இருந்தேன். எனது பிரார்த்தனை கடவுளின் காதுக்குக் கேட்டுவிட்டது. அந்த வாய்ப்பை எனக்கு அளித்துள்ளார்” என்று கையெடுத்துக் கும்பிட்டபடி கூறுகிறார்.

மீரட் நிர்வாகம் இவருக்காக ஓர் அறையை ஒதுக்கி அதில் இருக்கும்படி உத்தரவிட்டுள்ளது. அவர் இந்த மாவட்டத்தைத் தாண்டி வேறு எங்கும் செல்லக் கூடாது என்று உத்தரப்பிரதேச சிறைத் துறை அறிவுறுத்தியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அவர் திஹார் சிறைக்கு செல்ல இருக்கிறார்.

“தூக்கிலிடுவதற்கு முன்னால் பல செய்முறைகளை செய்ய வேண்டியது இருக்கிறது. நேரடியாக தூக்கிலிட்ட அனுபவம் இல்லை என்றாலும், எனது தாத்தா ஒரு குற்றவாளியை தூக்கில் போடும் போது, அவரின் கால்களை கட்டியிருக்கிறேன்” என்று சொல்கிறார்.

எனக்கு தற்போது மாதம் 5 ஆயிரம் வருமானமாக வருகிறது. சொந்த வீடு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் இருக்கிறது. கடன் கழுத்தை நெறிக்கிறது. இந்தப் பணம் இதில் இருந்து என்னை மீட்கும்” என்றும் பவன் கூறுகிறார்.

பலரும் தூக்கிலிடும் பணியைச் செய்பவர் எப்போதும் குடித்துக்கொண்டே இருப்பார்கள், மது போதையில் அந்தப் பணியைச் செய்வார்கள் என்று நினைக்கின்றனர். ஆனால், அது முற்றிலும் தவறானது. எனக்கு குடிப்பழக்கமே கிடையாது” என்றும் பவன் கூறுகிறார்.

சுதந்திர இந்தியாவில் ஒரே நேரத்தில் நான்குபேர் தூக்கிலிட இருப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னதாக மும்பை எரவாடா சிறையில் நான்கு பேர் தூக்கிலிடப்பட்டனர்.

தலை கால் புரியாமல் துள்ளி குதிக்கும் ஈரான்..!

இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் சதி!

Tags
Show More

Related Articles

Back to top button
Close