Sunday , July 22 2018
Breaking News
Home / Headlines News / காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நல்லூரில் உணவு ஒறுப்பு!!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நல்லூரில் உணவு ஒறுப்பு!!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திவரும் தொடர்போராட்டம் இன்று 500ஆவது நாளை எட்டியுள்ளது. அதைமுன்னிட்டு அவர்கள் இன்று யாழ்ப்பாணம், நல்லூரில் உணவு ஒறுப்புப் போராட்டம் முன்னெடுத்துள்ளனர்.

தமது போராட்டம் 500ஆவது நாளை எட்டியுள்ளது. எந்தத் தீர்வும் வழங்கப்படவில்லை. தமது போராட்டத்தை உலகுக்கு எடுத்துக் காட்டும் வகையில் நல்லூரின் முன்பாகப் போராட்டம் நடத்துகின்றோம் என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசு உரிய பதிலை வெளியிட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Check Also

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர் இவரா.?வெளிவந்த தகவல்..! காரணம் இதோ.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார வெளியே போகும் போட்டியாளர்கள் பட்டியலில் பாலாஜி, பொன்னம்பலம், ஜனனி ஐயர், ரம்யா, ஐஸ்வர்யா …