Breaking News
நடுக்கடலில் சிக்கி தவித்த 19 வங்காளதேச நாட்டினர் மீட்பு

நடுக்கடலில் சிக்கி தவித்த 19 வங்காளதேச நாட்டினர் மீட்பு

நடுக்கடலில் சிக்கி தவித்த 19 வங்காளதேச நாட்டினர் மீட்பு

ஒடிசாவின் பாராதீப் நகரில் இருந்து தென்கிழக்கே கடலில் சென்று கொண்டிருந்த ராணா என்ற பெயரிடப்பட்ட வங்காளதேச நாட்டை சேர்ந்த மீன்பிடி படகு ஒன்று இயந்திர கோளாறால் திடீரென நடுக்கடலில் நின்று விட்டது.

அதனை சரி செய்ய முயன்றும் பலனில்லாத சூழலில் படகில் பயணித்தவர்கள் கடந்த 10 நாட்களாக பரிதவித்து வந்தனர். இந்நிலையில், கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இந்திய கடலோர காவல் படையின் வரத் கப்பலின் அதிகாரிகள் இந்த படகை கண்டுள்ளனர்.

இதன்பின்னர் உடனடியாக படகில் இருந்த 19 பேரையும் மீட்டு, அவர்களுக்கு வேண்டிய முதலுதவி, உணவு மற்றும் குடிநீர் ஆகியவற்றை வழங்கினர். படகு பாதுகாப்புடன் மீட்டு கரைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுபற்றி வங்காளதேசத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்நாட்டு கடலோர காவல் படையிடம் படகில் இருந்தவர்களை ஒப்படைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15.6 லட்சத்தை தாண்டியது

About அருள்

Check Also

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,916 பேருக்கு கொரோனா …