Breaking News
Home / ஆன்மிகம் / பெரிய கோவிலில் 69 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன 2 சிவன் சிலைகள் மீட்பு
தஞ்சை பெரிய கோவில்

பெரிய கோவிலில் 69 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன 2 சிவன் சிலைகள் மீட்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares

தஞ்சை பெரிய கோவிலில் 69 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன 2 சிவன் சிலைகள் மீட்பு

சிவன் சிலைகள் தஞ்சை அரண்மனை கலைக்கூடத்தில் காட்சிப்பொருளாக இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

தஞ்சை பெரிய கோவிலில் இருந்து 69 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன 2 சிவன் சிலைகள், தஞ்சை அரண்மனை கலைக்கூடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

ராஜ ராஜ சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலுக்கு பல்வேறு தரப்பினராலும் 66 ஐம்பொன் சிலைகள் கொடுக்கப்பட்டன. அதில் ராஜ ராஜ சோழனின் மனைவியான பஞ்சவன் மாதேவியால் செய்யப்பட்ட அழகர் மற்றும் திரிபுராந்தகர் சிவன் சிலைகள் தஞ்சை அரண்மனை கலைக்கூடத்தில் காட்சிப்பொருளாக இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நிகழ்விடத்திற்கு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள், சுமார் 3 மணி நேரம் ஆய்வு செய்து இரண்டு சிவன் சிலைகளையும் மீட்டனர். இதையடுத்து திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு இரண்டு சிலைகளும் கொண்டு செல்லப்பட்டன.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன் மாணிக்கவேல், 69 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு சிவன் சிலைகளும் தஞ்சை கலைக்கூடத்திற்கு கொண்டு வரப்பட்டதற்கான ஆவணங்கள் இருந்ததாகவும், அதற்கு முன்பு சில ஆண்டுகள் ராஜகோபால் சாமி கோவிலில் இருந்ததாகவும் கூறினார். மேலும், சிலைகள் கலைக்கூடத்திற்கு எவ்வாறு வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

பிரதமர் மோடியுடன் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்திப்பு


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares

Check Also

ப.சிதம்பரம்

சிறை வாசத்தால் ப.சிதம்பரம் ஐந்து கிலோ எடை குறைந்துவிட்டார்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!3Shares ப.சிதம்பரம், 43 நாள்கள் சிறை வாசத்தில் 5 கிலோ எடை குறைந்துள்ளார் என்று அவருடைய வழக்கறிஞர் …