Breaking News
ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்.

ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்.

ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்.

நாடாளுமன்றத்தினை கூட்டுமாறும், பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நான்காவது நாளாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்துவதற்கு வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான பரிசீலனை உயர்நீதிமன்றில் நேற்று மூன்றாவது தினமாகவும் இடம்பெற்றது.

இதன்போது ஐந்து நீதியரசர்கள் அடங்கிய உயர்நீதிமன்ற ஆயம், குறித்த மனுக்கள் மீதான பரிசீலனையை இன்று முற்பகல் 10 மணிவரை ஒத்திவைத்துள்ளது.

முன்னதாக நேற்றைய தினம் இடம்பெற்ற பரிசீலனையின்போது, உத்தேசிக்கப்பட்;டவாறு எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றில் அறிவித்தது.

தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், குறித்த திகதியில் தேர்தலை நடத்த முடியாதென நேற்று நீதிமன்றுக்கு தெரியப்படுத்தினார்.

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையில் தேர்தலை நடத்துவது உசிதமானதல்ல எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சார்பில் அவர் மன்றுரைத்தார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்க நிலை நீங்கி, தேர்தல் நடத்தப்படுவதற்கான சூழ்ல ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் பரிந்துரைத்து 9 முதல் 12 வாரங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், தேர்தலை நடத்துவதற்கான தினம் அறிவிக்கப்படும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவித்தலின் பின்னர் சட்டத்தரணி சரித்த குணரத்னவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டது.

தமது தரப்பினர் கோரிய நிவாரணம் இதனூடாக கிடைப்பெற்றுள்ளமையினால், அந்த மனுவை மீளப் பெறுவதாக, அவர் சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், குறித்த மனு ஒன்றில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாஸ ராஜபக்ஷ மன்றில் முன்னிலையாகியிருந்தார்.

அரசியலமைப்பின் பிரகாரம், அவசர நிலைமையின்போதே நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியும் என அவர் மன்றில் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில், நாட்டில் சுகாதார பிரச்சினையே நிலவுகிறது.

எனுவே, நாடாளுமன்றத்தைக் கூட்டி, சட்டங்களை நிறைவேற்றுவதற்கான எந்தவொரு தேவைப்பாடும் இல்லை என்றும், நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு அமைய, அரசாங்கம் கொவிட்-19 ஐ கட்டுப்படுத்தி வருவதாக ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாஸ ராஜபக்ஷ இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கக்கூடாது என அவர் நீதிமன்றில் கோரினார்.

இதேநேரம், ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தர சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, குறித்த மனுக்களுக்கு எதிரான அடிப்படை ஆட்சேபனையை சமர்ப்பித்தார்.

அடிப்படை உரிமை மனுக்கள் சமர்ப்பிக்கப்படவேண்டிய குறித்த காலத்தின் பின்னரே அந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிந்தாக அவர் மன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, குறித்த மனுக்கள் தொடர்பான பரிசீலனையை இன்று முற்பகல் 10 மணிவரை ஒத்திவைப்பதற்கு ஐவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஆயம் உத்தரவு பிறப்பித்தது

ஜனாதிபதி ஆணைக்குழுவில் திலின கமகே முன்னிலை

About அருள்

Check Also

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை …