Breaking News
ஊசினாலே பயமா?

ஊசினாலே பயமா? அப்போ இதென்ன ரித்து?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஊசி என்றாலே பயம் என்ற ரித்விகா, பிக் பாஸ் லோகோவிற்கு முன்பாகவே டாட்டூ போட்டுக் கொண்டது அம்பலமாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த வார நேரடி நாமினேஷனில் இருந்து தப்பித்துக் கொள்ள ஹவுஸ்மேட்ஸ் சக போட்டியாளர்களை சமாதானம் செய்து சில டாஸ்க்குகளை செய்து முடிக்க வேண்டும்.

அதற்காக, மொட்டை அடிப்பது, ஹேர் கலரிங் செய்வது, ஹேர் கட் செய்வது, மாட்டு சாணத்தில் படுத்தது, புருவத்தை ப்ளீச் செய்தது போன்ற டாஸ்க்குகள் நடத்தப்பட்ட நிலையில், மிகவும் வலி மிகுந்த டாஸ்க் ரித்விகாவுக்கு கொடுக்கப்பட்டது. பிக் பாஸ் லோகோவை தனது கையில் நிரந்தர டாட்டூவாக போட்டுக் கொண்டார் ரித்விகா.

அப்போது ஊசி என்றாலே பயப்படும் நீ எதுக்கு இதை செய்கிறாய் என மும்தாஜ் கேட்டதற்கு, விஜியை நாமினேஷனில் இருந்து காப்பாற்றுவது இரண்டாம்பட்சம், முதலில் இந்த டாஸ்க்கை நான் எதிர்க்கொள்ள வேண்டும் என திடமாக் கூறினார்.

ரித்விகாவின் சின்சியாரிட்டிக்கு பாராட்டுக்கள் குவிந்தன. இந்நிலையில், இதற்கு முன்பாகவே ரித்விகா தனது கையில் டாட்டூ ஒன்றை போட்டுள்ளார். ஊசிக்கு பயப்படுவதாக பீலாவிட்டு, ஃபேஷனுக்காக டாட்டூ போட்டுக் கொண்ட ரித்விகாவை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …