Breaking News
எதற்கெடுத்தாலும்

எதற்கெடுத்தாலும் உதார் விடும் பாலாஜி: பங்கமாக கலாய்த்த கமல் ஹாசன்

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி பற்றி விமர்சிக்கும் ரித்விகா பாலாஜி எதற்கெடுத்தாலும் உதார் விடுவதாக கூறுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 60 நாட்கள் கடந்துள்ள நிலையில், போட்டியில் இருந்து 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். சண்டை சச்சரவுக்கு குறைவில்லாமல் செல்லும் பிக்பாஸ் சீசன் 2-ல் நாளுக்கு நாள் வீடு களேபரமாக மாறி வருகிறது.

இதையடுத்து நேற்று நடந்த நிகழ்ச்சியில் நேற்று எவிக்ஷனில் இருந்து ரித்விகா காப்பாற்றப்பட்டார். அதே போல் மற்றவர்களை பற்றி விமர்சனம் கூறும் அதே டாஸ்க் நேற்று நடந்தது.

இதில் ஐஸ்வர்யா மற்றும் சென்றாயனை பற்றி ஹவுஸ் மேட்ஸ் பலரது கருத்தும் ஒத்துப்போவதாகக் கமல் கூறினார்.இதற்கு முன்னதாகவே மும்தாஜை டார்க்கெட் செய்து மஹத்தும் ஐஸ்வர்யாவும் கூச்சலிட, ஹவுஸ் மேட்ஸுக்கு மட்டுமல்லாமல் பார்வையாளர்களுக்கும் எரிச்சலை வர வைத்தது.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் புரொமோ வீடியோவில் நேற்றைய டாஸ்க்கே இன்றும் தொடர்வதாக தெரிகிறது. அதில், மஹத்தை பற்றி விமர்சனம் செய்யும் சென்றாயன், மகத் தங்கமான பையன் என்று சொல்ல, அதற்கு இது என்ன நகைக்கடை விளம்பரமா?

என்று கமல் கேட்கிறார். பின் பாலாஜி எதற்கெடுத்தாலும் உதார் விடுகிறார் என்று ரித்விகா கூற, அதற்குக் கமலோ, என் மேல் தண்ணீர் ஊற்றட்டும் பார்த்துகிறேன் என்ற பாலாஜியின் டயலாக்கை கூறி கவுண்டர் அடிக்கிறார்.

பாலாஜியோ டேனியலை பற்றிப் பேசும் போது, அனைவரையும் ஒரு டெம்போவில் ஏற்றி ஒவ்வொருவராக இறக்கி விட்டுவிட்டு, ஃபைனல்சுக்கு சென்று விடுவார்” என்று சொல்ல டேனி உள்பட ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சிரிக்கின்றனர்.

இதனால் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி பஞ்சாயத்து இல்லாமல் கலகலப்பாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …