Breaking News
விஜயலக்ஷ்மியை

விஜயலக்ஷ்மியை காப்பாற்ற எதற்கும் துணிந்த ரித்விகா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த வார நாமினேஷனில் இருந்து விஜயலக்ஷ்மியை காப்பாற்ற ரித்விகா எதற்கும் துணிந்துவிட்டார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வார நாமினேஷனில் ஐஸ்வர்யா, மும்தாஜ், சென்ராயன், விஜயலக்ஷ்மி, ஜனனி ஆகிய 5 பேர் உள்ளனர்.

இது இந்த வாரத்துக்கான பட்டியலாகும். ஆனால், புதுவிதமாக இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ள போட்டியாளர்கள் அடுத்த வாரம் நேரடி நாமினேஷனில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஜனனி நாமினேஷனில் இருந்து தப்பிக்க பாலாஜிக்கு மொட்டையடித்தார். ஐஸ்வர்யா தப்பிக்க சென்ராயனுக்கு ரெட் கலர் ஹேர்கலரிங் செய்தார்.

சென்ராயனுக்காக ஐஸ்வர்யா தான் மிகவும் நேசிக்கும் தனது முடியை கட் செய்தார். இவர்களை தொடர்ந்து வைல்ட் கார்டில் எண்ட்ரி கொடுத்த விஜயலக்ஷ்மிக்காக ரித்விகா மிகவும் கடினமான வலிமிகுந்த டாஸ்க்கினை ஒப்புக் கொண்டுள்ளார்.

அடுத்த வாரத்தின் நேரடி நாமினேஷனில் இருந்து விஜயலக்ஷ்மியை காப்பாற்ற, ரித்விகா தனது கையில் பிக் பாஸ் லோகோவை நிரந்தரமாக டாட்டூ போட்டுக் கொண்டுள்ளார். இத்தனை வலி மிகுந்த டாஸ்க்கினை இவருக்காக ஒப்புக் கொள்ள வேண்டுமா என ரித்விகா மீது மும்தாஜ் கோபப்படுகிறார்.

இதனால் விஜிக்கும்-மும்தாஜுக்கும் முட்டிக்கும் என்பது ஹவுஸ்மேட்ஸின் கருத்து. எனிலும், விஜியை காப்பாற்றுவது இரண்டாம் பட்சம், முதலில் இதுபோன்ற சவாலான டாஸ்க்கை நான் எதிர்க்கொள்ள வேண்டும் என தனது வலிமையை உணர்த்த இந்த வலியை தாங்கிக் கொள்கிறார் ரித்து.

இத்தனை பரபரப்புக்கு இடையே, பிக் பாஸ் ’ஐ’ என விஜிக்கு இருக்கும் குழப்பத்தை ‘ஆய்’ என ஐஸ்வர்யா விளக்குவது இன்றைய நிகழ்ச்சியில் காமெடி சீனாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …