Breaking News
Home / இந்தியா செய்திகள் / கர்நாடகாவில் பச்சை நிறத்திற்கு மாறிய துங்கா ஆறு.

கர்நாடகாவில் பச்சை நிறத்திற்கு மாறிய துங்கா ஆறு.

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 10
    Shares

கர்நாடகாவில் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகிவரும் துங்கா ஆறு ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவிலான விவசாய நிலங்களுக்கு பாசன வசதியை கொடுக்கிறது.
லட்சக்கணக்கான மக்கள் குடிநீர் வசதியை பெறுகிறார்கள்.
இப்போது ஆறு பச்சையாக மாறியது, மீன்கள் எல்லாம் செத்து மிதப்பது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவங்களை அடுத்து பொதுமக்கள் நீரை பயன்படுத்த மிகவும் அச்சம் கொண்டுள்ளனர்.

ஆற்றுநீர் கடந்த 5, 6 நாட்களாக பச்சையாக மாறியது.
மீன்கள் இறந்து வருகிறது. ஆற்று நீரை நாங்கள் நேரடியாகவே குடிநீருக்கு பயன்படுத்தி வருகிறோம்.
இப்போது மிகவும் அச்சமாக உள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தோம்.
அவர்கள் இங்கு வந்து சோதனைக்காக மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.
தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளனர் என கிராம மக்கள் கூறியுள்ளனர்.


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 10
    Shares

Check Also

சூப்பர்

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது – மேற்கு வங்காள கவர்னர்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!10Shares மேற்கு வங்காள மாநில கவர்னர் ஜெகதீப் தன்கார், நான் ரஜினிகாந்தின் ரசிகர் என தெரிவித்துள்ளார். மேற்கு …