விளையாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை

ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2020 லில் நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக், 2022 ஆம் ஆண்டில் நடக்க உள்ள பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் மற்றும் உலக கோப்பை கால்பந்து உள்ளிட்ட முக்கிய போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு, உலக ஊக்க மருந்து தடுப்பு மையம் தடை விதித்துள்ளது.

கடந்த 2014ல் ரஷ்யாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடந்தது. இதில், பல ரஷ்ய வீரர்கள் ஊக்க மருந்து உட்கொண்டது தெரியவந்தது.

ரஷ்ய விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்த, அந்நாட்டு அரசே ஆதரவாக இருந்ததும் அம்பலமானது. இந்த நிலையில் சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் டபிள்யு.ஏ.டி.ஏ., செயற்குழு கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில், டபிள்யு.ஏ.டி.ஏ., விசாரணை குழுவின் பரிந்துரையை ஏற்று, ரஷ்யாவுக்கு 4 ஆண்டு தடை விதிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close