Breaking News
அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது

அமெரிக்காவில் வருகிற 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்பும் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பைடனும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தலில் ரஷியா, ஜனாதிபதி டிரம்புக்கு ஆதரவாக செயல்படலாம் என ஜனநாயக கட்சியினர் குற்றம் சாட்டி வரும் நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் ரஷியாவிடம் இருந்து பணம் வாங்கியதாக குற்றம் சாட்டுகிறார். இந்த 2 குற்றச்சாட்டுகளையும் ரஷியா மறுக்கிறது.

இந்த நிலையில் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் விமர்சனம் செய்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது இதுகுறித்து அவர் கூறுகையில் ‘அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

அடுத்ததாக, அமெரிக்காவுக்கு பெரும் போட்டியாக சீனா உள்ளது. நாம் இதனை எவ்வாறு கையாள்வது என்பதை பொறுத்திருத்து பார்ப்போம்’ என்றார்.

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.37 கோடி

About அருள்

Check Also

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம் மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்தும், ஆங் சாங் சூகியை விடுதலை செய்யக்கோரியும் …