Breaking News

ரஷ்யாவில் இன்று மேலும் 5394 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

ரஷ்யாவில் இன்று மேலும் 5394 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 1,82,50,596 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் தொற்றுக்கு இதுவரை 6,93,048 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்ய நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,394 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 8,56,264 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு மேலும் 79 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 14,207 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் பேர் 3,420 குணமடைந்த நிலையில், இதுவரை 6,53,593 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது 1,88,464 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் (48,13,647 பேர்), இரண்டாம் இடத்தில் பிரேசிலும் (27,33,677 பேர்), மூன்றாவது இடத்தில் இந்தியாவும்(18,08,128 பேர்) உள்ளன.

மேற்கு வங்காள அரசு தடையால் சென்னை-கொல்கத்தா விமான சேவை 15-ந்தேதி வரை ரத்து

About அருள்

Check Also

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம் முறைகேடு கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற …