Breaking News
ரஷ்யாவில் ஒரேநாளில் அதிக அளவாக கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் ஒரேநாளில் அதிக அளவாக கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் ஒரேநாளில் அதிக அளவாக கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது.

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 28,145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 23,75,546 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 554 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆயிரத்து 607 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவிலிருந்து 29,502 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 18,59,851 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4,74,088 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராணுவ மந்திரியை தேர்வு செய்வதில் ஜோ பைடன் கட்சியிலேயே எதிர்ப்பு

About அருள்

Check Also

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம் மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்தும், ஆங் சாங் சூகியை விடுதலை செய்யக்கோரியும் …