Breaking News
கட்சி பொதுச்செயலாளர் விவகாரம் குறித்து இரா.சம்பந்தன்

கட்சி பொதுச்செயலாளர் விவகாரம் குறித்து இரா.சம்பந்தன்

கட்சி பொதுச்செயலாளர் விவகாரம் குறித்து ஆர்.சம்பந்தன்

இலங்கை தமிழரசு கட்சியின் புதிய பொதுசெயலாளர் தொடர்பாக, கட்சியின் பொதுக்குழுவே தீர்மானிக்கும் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரைராசசிங்கம் கடந்த 11 ஆம் திகதி அறிவித்திருந்தார்.

கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு இது தொடர்பான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்; அவர் எமது செய்தி சேவைக்கு உறுதிப்படுத்தினார்.

குறித்த கடிதத்தின் பிரதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் பொதுசெயலாளர் பதவியில் இருந்து அவர் விலகுவதாக அறிவிக்கும் கடிதம் தமக்கு கிடைத்திருப்பதாகவும், அது தொடர்பாக விரைவில் பொதுக்குழு கூடி தீர்மானம் எடுக்கும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் மட்டகளப்பு மாவட்டத்திலிருந்தே தெரிவு செய்யப்படுவார் என வட மாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க முன்வர வேண்டும்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …