Breaking News
திமுகவில் அழகிரியை

திமுகவில் அழகிரியை சேர்த்தால் கட்சி வலுப்பெறும்

மு.க.அழகிரியைக் கட்சியில் சேர்ப்பதன் மூலமாக தி.மு.க வலுப்பெறும் என நாஞ்சில் சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.

திமுக -அதிமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து வந்த நாஞ்சில் சம்பத், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.

இதையடுத்து தினகரன் அணியிலிருந்து விலகி இனிமேல் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்று அறிவித்தார்.

தற்போது நாஞ்சில் சம்பத் திமுகவில் இணைய இருப்பதாகச் சமூக வலைதளங்களில் சில செய்திகள் பரவின.

இதுகுறித்து திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அப்போது அவர், ‘டி.டி.வி.தினகரன் அணியில் அல்லது தி.மு.கவில் இணையப்போவதாக வரும் செய்திகள் பொய்யானவை. நான் எந்தக் கட்சியிலும் ஈடுபடும் எண்ணம் இல்லை.

அரசியலை விட்டு வெகுதூரம் வந்துவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.

‘அழகிரி ஆயிரக்கணக்கான தி.மு.க தொண்டர்களோடு பணியாற்றியுள்ளார். எனவே அவரை தி.மு.கவில் சேர்க்க வேண்டும்.

அதனால் அவரை மீண்டும் கட்சியில் சேர்த்தால் தி.மு.க வலுப்பெறும். அழகிரியை தி.மு.கவில் சேர்ப்பது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …