Breaking News

விளக்கம் கோரவுள்ளதாக சசிகலா ரவிராஜ் தெரிவிப்பு

விளக்கம் கோரவுள்ளதாக சசிகலா ரவிராஜ் தெரிவிப்பு

விருப்பு வாக்கு தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் விளக்கம் கோரவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்ட யாழ்பபாண மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட விருப்பு வாக்கு விடயத்தில் முறைகேடு இடம்பெற்றதாக தெரிவித்து, நேற்றிரவு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வாக்கு எண்ணும் நிலையத்தில் குழப்ப நிலை ஒன்று பதிவாகியிருந்தது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் விருப்பு வாக்கு பட்டியலில் தம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்கு எம்.ஏ.சுமந்திரன் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜின் விருப்பு வாக்குகளை முறைகேடு செய்தாக குற்றம் சுமத்தி, அவருக்கு எதிராக கூச்சல் எழுப்பப்பட்டது.

இந்தநிலையில் விருப்பு வாக்கு தொடர்பில் தாம் விளக்கம் கோரவுள்ளதாக இதன்போது ஊடகங்களுக்கு சசிகலா ரவிராஜ் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கையில் முறைக்கேடுகள் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி விருப்பு வாக்குகளை அறிவித்த போது அங்கிருந்தவர்கள் சிலர் கூச்சல் எழுப்பினர்.

இதற்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துரைத்தார்.

இதேவேளை 20 ஆசனங்கள் எதிர்பார்க்கப்பட்ட போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போதை சூழ்நிலையில் 10 ஆசனங்களை பெற்றுக் கொண்டமை சிறப்பான வெற்றி என அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் தமது தரப்பின் சேவையை அறிந்து தேர்தலில் வாக்குகளை வழங்கியுள்ளதாக மலைய மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் அனுதாப வாக்குகளையும் கடந்து புதிய மலையகம் ஒன்றை உருவாக்கும் நோக்கில் வாக்களித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.

கொட்டக்கலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் எதிர்வரும் காலங்களில் இன பேதமின்றி அனைவருக்கும் செயலாற்றவுள்ளதாக பதுளை மாவட்ட போட்டியிட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Today rasi palan – 08.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 08, 2020)

About அருள்

Check Also

தேசியப் பட்டியல் தவிர்ந்த 196 ஆசனங்களில் 128 ஆசனங்களை கைப்பற்றி பொதுஜன முன்னணி

தேசியப் பட்டியல் தவிர்ந்த 196 ஆசனங்களில் 128 ஆசனங்களை கைப்பற்றி பொதுஜன முன்னணி

தேசியப் பட்டியல் தவிர்ந்த 196 ஆசனங்களில் 128 ஆசனங்களை கைப்பற்றி பொதுஜன முன்னணி தேசியப் பட்டியலில் உள்ளடங்கும் 29 உறுப்பினர்கள் …