Breaking News
கருணாநிதி குறித்து மீம்ஸ் போட வேண்டாம்

கருணாநிதி குறித்து மீம்ஸ் போட வேண்டாம்: மீம்ஸ் கிரியேட்டர்களை வறுத்தெடுக்கும் நடிகர் சதீஸ்

ஜியோவில் இலவச டேட்டா இருக்கின்றது என்பதற்காகக் கருணாநிதி குறித்து மீம்ஸ்களை ஷேர் செய்வது தவறு என்று நடிகர் சதீஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை நலிவடைந்ததைத் தொடர்ந்து அவர் ஒரு வாரமாகச் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மீண்டும் அவர் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று திமுக தொண்டர்கள் பிரார்த்தனை செய்து செய்து வருகின்றனர்.

இது ஒரு புறமிருக்க மீம்ஸ் கிரியேட்டர்கள் கருணாநிதியின் உடல்நிலை குறித்தும் மீம்ஸ் போட்டும், உடல்நிலை குறித்தும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இது குறித்து திமுக தரப்பிலிருந்து தொண்டர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்ற அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் ‘பூமராங்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சதீஷ், ‘கருணாநிதி ஒரு மிகப்பெரிய தலைவர்.

அவர் போன்ற ஒரு தலைவர் இனி நமக்குக் கிடைப்பது அரிது. எனவே தயவுசெய்து அவரது உடல்நிலையை வைத்து யாரும் மீம்ஸ் போட வேண்டாம்.

அவர் குறித்த மீம்ஸ்களை பார்க்கும்போது மனது கஷ்டமாக உள்ளது.மேலும் மீம்ஸ்களை ஒருசிலர் தான் கிரியேட் செய்கின்றனர்.

ஆனால் நம்மில் பலர் அந்த மீம்ஸ்களை ஷேர் செய்து பரப்பி விடுகிறோம். நாம் அந்த மீம்ஸ்களை ஷேர் செய்யாமல் இருந்தாலே போதும்.

இப்போது ஜியோவில் இலவச டேட்டா இருக்கின்றது என்பதற்காக இதுபோன்ற மீம்ஸ்களை ஷேர் செய்வது தவறு’ என்று கூறியுள்ளார்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …