உலக செய்திகள்முக்கிய செய்திகள்

சீனாவில் இருந்து வருபவர்கள் சவுதி அரேபியாவுக்குள் நுழைய தடை

சீனாவில் இருந்து வருபவர்கள் சவுதி அரேபியாவுக்குள் நுழைய தடை

கொரோனா வைரஸ் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சீனா நகரங்களில் இருந்து சவுதி அரேபியாவுக்குள் நுழைய பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 635 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 30,840 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 3,863 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பிடியில் இருந்து தீவிர சிகிச்சை காரணமாக 1,615 பேர் உயிர் தப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சீனா நகரங்களில் இருந்து சவுதி அரேபியாவுக்குள் நுழைய பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்து உள்ளது.

சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதித்திருக்கும் நாடுகளில் 16-வதாக சவுதி அரேபியா இணைந்துள்ளது.

சவுதி அரேபியா தனது குடிமக்களுக்கு சீனாவுக்குச் செல்வதைத் தடைசெய்ததுடன், தடையை மீறிய எவராது அதிகாரிகளிடம் சிக்கினால், அவர்களின் பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது.

மேலும் ஆசிய நாடுகளுக்கு செல்லும் குடிமக்களுக்கு பயண ஆவணங்கள் குறித்த ஒழுங்குமுறை விதிகள் அமுல்படுத்தப்படும் என்று சவுதி அரேபியாவின் குடியுரிமைத் துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சவுதி அரேபியாவில் இதுவரை கண்டறியப்படவில்லை, ஆனால் வுகானைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குடும்பம் உள்பட ஐந்து பேர் அண்டை நாடான ஐக்கிய அமீரகத்தில் கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பதினைந்து நாடுகளும் கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து சில வகையான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு கொடுக்கும் ஐடியா மணி சு. சுவாமி!

சிறுவனின் குடும்பத்தினரை சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன்

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More

Related Articles

Back to top button
Close