Monday , August 26 2019
Breaking News
Home / முக்கிய செய்திகள் / தேடப்பட்டுவந்த வாகனங்கள் வரக்காபொலயில் கண்டுபிடிப்பு.

தேடப்பட்டுவந்த வாகனங்கள் வரக்காபொலயில் கண்டுபிடிப்பு.

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 14
    Shares

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற வெப்புச் சம்பவங்கள் தொடர்பில் முன்னதாக 40 பேர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 18 சந்தேகத்துக்குரியவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கட்டானை கட்டுவாபிட்டியில் 6 பேரும், பேருவளையில் 5 பேரும், அளுத்கமயில் 6 பேரும், வரக்காபொலயில் ஒருவரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த, வேன் ரக வாகனமும், உந்துருளி ஒன்றும் வரக்காபொல நகரில் உள்ள வீடொன்றில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன.

காவல்துறை விசேட அதிரடிப்படையினால் நேற்றிரவு இந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வரக்காபொல – அங்குருவெல்ல வீதியின் மஸ்ஜிட் ஒழுங்கை – இலக்கம் 9 என்ற முகவரியில் உள்ள வீட்டில் வைத்து முதலில் 144 – 2446 என்ற இலக்கத் தகடினை உடைய செம்மஞ்சள் நிற உந்துருளி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பின்னர் SGPH 3779 என்ற இலக்கத் தகடினைக் கொண்ட வேன் ரக வாகனமும் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தொடர்பாடலுக்காக பயன்படுத்தப்படும் வோக்கி டோக்கி சாதனம் நான்கும் குறித்த வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டதுடன், அவை அனைத்து செயற்பாட்டு தன்மையில் உள்ளது என காவல்துறை விசேட அதிரடிப் படை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த வீட்டிலிருந்த மொஹமட் ஜுனைட் மொஹமட் ஆமீன் என்ற 47 வயதுடைய சந்தேகத்துக்குரியவருடன் மற்றுமொருவரும் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 14
    Shares

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய ராசிப்பலன் 26 ஆவணி 2019 திங்கட்கிழமை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!7Sharesஇன்றைய பஞ்சாங்கம் 26-08-2019, ஆவணி 09, திங்கட்கிழமை, தசமி திதி காலை 07.03 வரை பின்பு ஏகாதசி …