இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

ஆசன முன்பதிவு நிலையத்தில் கைகலப்பு

நால்வர் கைது

ஆசன முன்பதிவு நிலையத்தில் கைகலப்பு

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் நேற்று மாலை இலங்கை போக்குவரத்து சபையின் ஆசன முன் பதிவு நிலையத்தில் இடம்பெற்ற கைகலப்பில் நால்வரை கைது செய்ததாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர் .

குறித்த சம்பவம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று இலங்கை போக்குவரத்து சபையினர் ஆசன முன்பதிவு நிலையத்திற்கு வருகை தந்த பொதுசந்தையில் கடமைபுரியும் சுமேதகம பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய நபர் ஆசன முன்பதிவு செய்வதற்கு வழங்கிய 1000 ரூபாய்க்கு சில்லறை இல்லை என தெரிவித்த பதிவாளர் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.

மேலும் முன்பதிவு செய்வதற்கு வருகை தந்த நபர் மேலும் மூவரை வரவழைத்து பதிவாளர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த தலைமையக பொலிஸார் ஆசன முன்பதிவு நிலையத்தில் கடைமை செய்த ஊழியர் மீது தாக்குதல் செய்யத் நால்வரை கைது செய்ததாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் முன்பதிவு செய்வதற்கு வருகை தந்த நபர் தங்கல்ல பிரதேச 31வயது நபர் திருகோணமலை காமினி திசாநாயக்க மாவத்தை பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் அவருடன் இணைந்து தாக்குதல் நடாத்திய நபர்கள் முறையே மகமாயபுர வயது 33,சுமேதகம வயது23,5ம் கட்டை, சுமேதன்சம்புர வயது 49 பிரதேச வாசிகள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை பதில் நீதிவான் முன்னால் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்

மகளை காமப்பசிக்கு இரையாக்க துடித்த தந்தை!

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close