நல்லாட்சி அரசின் இரகசியங்கள் அம்பலம்

நல்லாட்சி அரசின் இரகசியங்கள் அம்பலம்

நல்லாட்சி அரசின் இரகசியங்கள் அம்பலம்

2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடந்த ஜனநாயகத்திற்கு எதிரான ஆட்சி மாற்றத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரான ரவி கருணாநாயக்கவே அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்திருந்ததாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தகவல் வெளியிட்டுள்ளார்.

சம்பிக்க ரணவக்க மோசடியாளர் என ரவி கருணாநாயக்க தொடர்ந்தும் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

நான் பொறுப்பு வகித்த அனைத்து நிறுவனங்களையும் இலாபம் ஈட்டும் நிலைமைக்கு கொண்டு வந்தேன்.

குறிப்பாக மின்சார சபை உட்பட நஷ்டத்தில் இயங்கிய பல நிறுவனங்களை இலாபம் ஈட்டும் நிலைமைக்கு கொண்டு வந்தேன். எனக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருக்குமாயின் அதனை வெளியிடுமாறு ரவி கருணாநாயக்கவுக்கு சவால் விடுக்கின்றேன்.

பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியை மேலும் பலவீனப்படுத்தி ரணில் விக்ரமசிங்கவை கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்து விரட்டி விட்டு அதனை கைப்பற்றும் நடவடிக்கையிலேயே ரவி கருணாநாயக்க ஈடுபட்டுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாயக பகுதிகளில் அடையாளங்களை அழிக்க முயற்சி!

About அருள்

Check Also

இலங்கையில் பதிவான 12ஆவது கொரோனா மரணம்

இலங்கையில் பதிவான 12ஆவது கொரோனா மரணம்

இலங்கையில் பதிவான 12ஆவது கொரோனா மரணம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. …