Breaking News
சீமான்

சீமான் ஒரு பொய்காரன்: சுப.வீரபாண்டியன் கோபம்

கருணாநிதி குறித்து சீமான் கூறியது பொய் என்று திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவையடுத்து அவருடனான தனது பழக்கம் குறித்த தகவல்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பகிர்ந்து கொண்டார்.

சமீபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடந்த விழாவில் பேசிய அவர், கலைஞரின் சட்டைப் பையில் இருக்கும்பேனாவை எடுத்து எழுதிவிட்டு மீண்டும் கலைஞரின் சட்டைப் பையில் வைக்கும் அளவிற்கு தனக்கு அவருடன் நெருக்கமான பழக்கம் இருந்ததாகக் கூறியிருந்தார்.

இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிக்குப் பேட்டி அளித்துள்ள சுப.வீரபாண்டியன், ‘வாழ்த்துகள் என்ற படத்தின் தலைப்பு குறித்து பேச நான் தான் சீமானைக் கலைஞரிடம் அழைத்துக் கொண்டு போனேன்.அதன் பிறகு சீமான் அவரைச் சந்தித்தாக தெரியவில்லை.

தற்போது கலைஞரின் சட்டைப் பையில் இருந்து பேனாவை எடுத்து எழுதிவிட்டு மீண்டும் அவர் சட்டைப் பையில் வைக்கும் அளவிற்கு அவருடன் தனக்கு பழக்கம் என்று சீமான் கூறியிருப்பதில் உண்மை இல்லை.

ஏனென்றால் தி.மு.க பொதுச் செயலாளரும் கலைஞரின் நெருங்கிய நண்பருமான பேராசிரியர் அன்பழகன் கூடக் கலைஞர் சட்டைப் பையில் இருந்து பேனாவை எடுத்து எழுதுவாரா? என்பது சந்தேகம் தான். பொய் சொல்லலாம், ஆனால் பொருந்தப் பொய் சொல்லிப் பழக வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …