Breaking News

வேடந்தாங்கல் பறவைகள் சரணலாயத்தின் பரப்பளவைக்

வேடந்தாங்கல் பறவைகள் சரணலாயத்தின் பரப்பளவைக்

வேடந்தாங்கல் பரப்பளவு குறைக்கும் விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் நாட்டின் மிகப் பழமையான நீர் பறவைகள் சரணாலயங்களில் ஒன்றாகும்.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளிலிருந்து, 190க்கும் மேற்பட்ட பறவை இனங்களைச் சார்ந்த, ஏறத்தாழ 40,000 பறவைகள் இனப்பெருக்கத்துக்காகவும் உணவு தேவைக்காகவும் தட்பவெப்பச் சூழலுக்காவும் வேடந்தாங்கலை நோக்கி வருகின்றன.

பரப்பளவைப் பொறுத்தவரை சிறியதாக இருந்தாலும் ஆண்டுதோறும் பறவையினங்களைப் பார்வையிட இங்கு வருகை தரும் மக்கள் அதிகம் என்பதால் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் வேடந்தாங்கல் திகழ்கிறது.

தமிழகத்தின் மிக முக்கிய அடையாளமான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை 5 கி.மீ.-ல் இருந்து 3 கி.மீ.-ஆகக் குறைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாய் வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.

நாம் வாழும் பூமியானது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானதாகும்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே தமிழர்மறை காட்டும் அறம். பல்லுயிர் என்பது புல், பூண்டு, பூச்சிகள், பறவைகள், விலங்குகள், காடுகள் என அனைத்தும் சேர்ந்ததுதான்.

பசிக்கும், தலைவலிக்கும் தொடர்பு இருக்கிறது என்கிறது அறிவியல். உடலில் ஒவ்வொரு முனைக்கும் இன்னொரு பகுதிக்கும் தொடர்பு இருக்கிறது என்கிறது அறிவியல்.

அதைப் போலத்தான் புதர்களும், சோலைகளும், சதுப்பு நிலக் காடுகளும், அடர் காடுகளும், விலங்குகளும், பறவைகளும், ஒட்டு உண்ணிகளும் என ஒவ்வொரு உயிரும் ஒன்றோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்து இருக்கிறது.

இதில் ஒரு மூலையில் சிக்கல் ஏற்படுத்தினாலும் அது இன்னொரு மூலையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது கடந்த காலப் புவியியல் வரலாறுகள் சொல்லும் உண்மை.

தமிழகத்தில் உச்சத்தில் கொரோனா.. இன்று ஒரேநாளில் 1927 பேர் பாதிப்பு

About அருள்

Check Also

தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி தமிழக அரசு முதல் கட்டமாக 6 லட்சம் அரசு, …