சினிமா செய்திகள்முக்கிய செய்திகள்

சினிமாவுல அரசியல் பண்ணாதீங்க! – ஆர்.கே.செல்வமணி

சினிமாவுல அரசியல் பண்ணாதீங்க! – ஆர்.கே.செல்வமணி

மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பில் பாஜகவினர் சென்று போராட்டம் நடத்தியதற்கு ஆர்.கே.செல்வமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

விஜய் வீட்டில் வருமானவரி சோதனை முடிந்த நிலையில் மீண்டும் மாஸ்டர் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் படபிடிப்பு நடைபெற்ற போது பாஜகவினர் சிலர் படப்பிடிப்பு பகுதியில் வந்து போராட்டம் செய்ய ஆரம்பித்ததால் படப்பிடிப்பு தடைப்பட்டது.

தடை செய்யப்பட்ட இடத்தில் படப்பிடிப்பு நடத்தியதாக பாஜகவினர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். ஆனால் படக்குழுவோ உரிய அனுமதி பெற்றுதான் படப்பிடிப்பு நடத்தி வருவதாக தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ”விஜய்யின் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் பாஜகவினர் போராட்டம் நடத்தியதால் சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திரைப்படத்துறையில் பெரிய அளவில் பிரச்சினைகள் வர இருப்பது போல தெரிகிறது. சினிமாவில் அரசியல் செய்ய வேண்டாம்” என கூறியுள்ளார்.

ரஜினியின் 2 படத்திற்கு பைனான்ஸ் செய்த அன்புச்செழியன்

சினிமா வாய்ப்புக்காக யார் கூட வேணாலும் போவேன்

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More

Related Articles

Back to top button
Close