Breaking News
துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் போட்டி

துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் போட்டி

துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் போட்டி

ஜனநாயக கட்சியின் சார்பில் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக போட்டியிட இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஜோ பிடன் அறிவித்தார்.

டுவிட்டரில் இது குறித்து ஜோ பிடன் கூறுகையில், “ துணை அதிபர் பதவிக்கு வேட்பாளராக கமலா ஹாரீஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் மிகச்சிறந்த மக்கள் சேவகர்களில் ஒருவர் கமலா ஹாரீஸ் “ என்று தெரிவித்துள்ளார்.

கமலா ஹாரீஸின் பெற்றோர் அமெரிக்காவில் குடியேறியவர்கள் ஆவர். அவரது தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர்.

தாயார் இந்தியர் ஆவார். கலிபோர்னியா மாகாணத்தில் அட்டார்னி ஜெனராலாக தேர்வு செய்யப்பட்ட முதல் கறுப்பின பெண் கமலா ஹாரீஸ் தான் ஆவார்.

அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் தென் ஆசிய பாரம்பரியத்தை கொண்ட முதல் பெண் என்ற பெருமையையும் கமலா ஹாரீஸ் பெற்றுள்ளார்.

நாட்டுக்குள் மஞ்சள் கொண்டுவந்த சந்தேக நபர்கள் கைது

About அருள்

Check Also

தெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்

தெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்

தெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் திடீர் நிலநடுக்கம் தெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் சனிக்கிழமை (உள்ளூர் நேரம்) ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் …