Breaking News

விஜயகலா, விக்னேஸ்வரன், சிவா­ஜிலிங்கம் ஆகியோரை புனர்­வாழ்­வுக்கு அனுப்­புக – ரஞ்­சன் ராம­நா­யக்க !!

இரா­ஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன், வட­மா­காண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­­னேஸ்வ­ரன் வட­ மா­காண சபை­ உ­றுப்­பி­னர் எம்.கே .சிவா­ஜி­லிங்­கம் ஆகி­யோரை புனர்­வாழ்வு முகா­முக்கு அனுப்­ப­வேண்­டும்.

விடு­த­லைப்­பு­லி­க­ளின் மீள் உரு­வாக்­கம் தொடர்­பில் இவர்­களே கருத்து கூறி வரு­கின்­ற­னர். இவ்­வாறு பிரதி அமைச்­ச­ரும் கம்­பஹா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரஞ்­சன் ராம­நா­யக்க தெரி­வித்­தார்.

தமிழ் மக்­கள் நிம்­ம­தி­யாக வாழ­வேண்­டு­மா­னால் வடக்கு, கிழக்­கில் விடு­த­லைப்­பு­லி­களை மீள் உரு­வாக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது என்று இரா­ஜாங்க அமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் நேற்று முன்­தி­னம் யாழ்ப்­பா­ணத்­தில் கருத்­துத் தெரி­வித்­தார்.

அது தொடர்­பில் ரஞ்­சன் ராம­நா­யக்க நேற்று செய்­தி­யா­ளர் சந்­திப்பு ஒன்றை நடத்­தி­னார். அதி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­தா­வது,

இரா­ஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் தனது பத­விப்­பி­ர­மா­ணத்­திற்கு ஏற்­காத வகை­யில் கருத்து கூறி­யுள்­ளார். இது தொடர்­பில் அரச தலை­வ­ரும், தலைமை அமைச்­ச­ரும் விசா­ரித்து நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும். பதற்­றத்­தில் இவ்­வாறு பேசி­ய­தாக இரா­ஜாங்க அமைச்­சர் கூறு­கின்­றார்.

வடக்­கில் இடம்­பெற்று வரும் போதைப் பாவனை மற்­றும் வன்­மு­றை­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு பிர­பா­க­ரன் மீண்­டும் வர­வேண்­டு­மெ­னக் கூறு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

புலி­க­ளின் மீள உரு­வாக வேண்­டு­மென்று கருத்து தெரி­விக்­கும் இரா­ஜாங்க அமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன், வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ரன், மாகா­ண­சபை உறுப்­பி­னர் எம்.கே. சிவா­ஜி­லிங்­கம் ஆகி­யோரை மறு­வாழ்வு பெறு­வ­தற்கு அனுப்­ப­ வேண்­டும்.

தற்­போது ஹிட்­ல­ரின் ஆட்சி வேண்­டு­மென்று பௌத்த மத­குரு கூறு­கின்­றார். அதே­போன்று பிர­பா­க­ர­னின் ஆட்சி வேண்­டு­மென்று கோரப்­ப­டு­கின்­றது. இவை தவ­றான செயற்­பா­டு­க­ளா­கும்.

நான் அந்­தக்­கூட்­டத்­தில் இருந்­தி­ருந்­தால் இரா­ஜாங்க அமைச்­ச­ரின் பேச்சை இடை­ம­றித்து இவ்­வாறு பேசு­வது தவறு என்று கூறி­யி­ருப்­பேன். இரா­ஜாங்க அமைச்­சர் தான் கூறிய கூற்றை மீளப் பெற­வேண்­டும்.- என்­றார்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …