அதிமுக

அதிமுக தொண்டர்களின் அதிரடி போஸ்டர்

இன்று அதிமுக நிர்வாகிகள் குழுவினர்களின் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் அதிமுகவினர்களின் போஸ்டர் சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சற்றுமுன் ‘பொதுச்செயலாளராக பொறுப்பேற்க வாருங்கள்’ என எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் சிவகெங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் உள்ள அதிமுக தொண்டர்கள், ‘அதிமுக பொதுச்செயலாளராக செங்கோட்டையனை நியமனம் செய்யுங்கள்’ என்று கோரிக்கை விடுத்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

இந்த போஸ்டர்கள் இணையதளங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களிலும் வைரலாகி அதிமுக தலைமைக்கு தர்மசங்கடத்தை கொடுத்துள்ளது

எனவே இன்றைய கூட்டத்தில் பொதுச்செயலாளர் தேர்வு குறித்து காரசாரமான விவாதங்கள் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் தவிர்த்து மூன்றாவது நபரை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய வேண்டும் என்பதே பலரது எண்ணமாக உள்ளது.

கொண்டாட்டத்தை ஆரம்பித்த ரசிகர்கள்

Check Also

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10576 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10576 ஆக உயர்வு சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 576 ஆக அதிகரித்து …