Breaking News

நான் அப்பா ஆயிட்டேன் டா…: சந்தோஷத்தில் துள்ளி குதித்த சென்ராயன்!

பிக் பாஸ் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த கயல்விழி, தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை மாமா சென்ராயனிடம் கூறியது, அவர் துள்ளி குதித்து மகிழ்ந்த காட்சி அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 70 நாட்களை கடந்துவிட்ட நிலையில், இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க்கை பிக் பாஸ் அறிமுகம் செய்திருக்கிறார்.

போட்டியாளர்களின் குடும்பத்தினர் வரிசையாக பிக் பாஸ் வீட்டிற்கு வந்து சர்ப்ரைஸ் விசிட் கொடுத்து போட்டியாளர்களை மகிழ்வித்து செல்கின்றனர்.

இந்நிலையில், பிக் பாஸ் வீடில் வெகுளித்தனமான போட்டியாளர் என்ற பெயரை பெற்ற சென்ராயனின் மனைவி கயல்விழி இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் வருகிறார். இது தொடர்பான புதிய புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

அதில், கயல்விழி தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கணவர் சென்ராயனிடம் கூறுகிறார். அந்த செய்தியைக் கேட்டதும் தலைகால் புரியாமல் மகிழ்ச்சியில் சென்ராயன், ‘நான் அப்பா ஆயிட்டேன் டா…’ என துள்ளி குதித்தது அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணமான கயல்விழி, சென்ராயன் தம்பதிக்கு நீண்ட நாட்கள் கழித்து குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …