Breaking News
உமா ரியாஸ்

வச்சி செய்ய விரும்பும் உமா ரியாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்ட ஷாரிக்கின் அம்மாவும், பிரபல நடிகையுமான உமா ரியாஸ் வைல்ட் கார்ட் எண்ட்ரியில் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல விரும்புவதாக கமலிடம் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் யாரும் எதிர்ப்பார்க்காத விதமாக ஷாரிக் வெளியேறினார். முதன்முறையாக எவிக்‌ஷனுக்கு காரணமின்றி நாமினேட் செய்யப்பட்ட ஷாரிக், பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்.

இது பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களை கடும் அதிர்ச்சி மற்றும் சோகத்தில் ஆழ்த்தியது. ஷாரிக்கின் எவிக்‌ஷனை சற்றும் ஏற்காத ஐஸ்வர்யா, யாஷிகா, மகத், மும்தாஜ், பாலாஜி உள்ளிட்டோர் மிகவும் கண்ணீர் மல்க ஷாரிக்கை வழியனுப்பி வைத்தனர்.

பின்னர் மக்கள் மேடைக்கு வந்த ஷாரிக்கை அவரது தாயார் உமா ரியாஸ் வரவேற்றார். அப்போது, வைல்ட் கார்ட் எண்ட்ரியில் தன்னை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்குமாறு கமல்ஹாசனிடம் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கை சும்மா ஆசைக்காக இல்லைங்க, உள்ளே போய் எல்லாத்தையும் வச்சி செய்ய விரும்புவதாக தெரிவித்தார்.

ஷாரிக் வெளியேறியதற்கு காரணமானவர்களை உள்ளே போய் ஒரு காட்டுக்காட்ட உமா ரியாஸ் திட்டமிட்டிருக்கிறார் போல. இதற்கு தலையில் அடித்துக் கொண்டதை தவிர கமல்ஹாசன் எந்த உத்திரவாதமும் கொடுக்கவில்லை.

ஒருவேளை உமா ரியாஸின் வேண்டுகோளை பிக் பாஸ் ஏற்றுக் கொண்டால் பிக் பாஸ் வீட்டில் என்ன நடக்கும்?? நினைத்து பார்க்கவே தலை சுற்றுகிறது.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …