இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

‘போர்க்குற்றவாளி’ சவேந்திர சில்வா அமெரிக்காவுக்குள் நுழையத் தடை!

- அவரது குடும்பத்தினருக்கும் ஆப்பு; இராஜாங்கத் திணைக்களம் அதிரடி அறிவிப்பு

‘போர்க்குற்றவாளி’ சவேந்திர சில்வா அமெரிக்காவுக்குள் நுழையத் தடை!

ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இந்த அதிரடி அறிவிப்பை இன்று விடுத்துள்ளது.

2009ஆம் ஆண்டில் போரின் இறுதிக்கட்டத்தின்போது இராணுவத்தின் 58 ஆவது பிரிவினரால் மனித உரிமை மீறல்களில், அதாவது சட்டவிரோதக் கொலைகளில், அந்தப் பிரிவின் அதிகாரியான சவேந்திர சில்வாவின் ஈடுபாடு தொடர்பில் நம்பகமான தகவல்கள் கிடைத்திருப்பதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது.

மனித உரிமைகளை ஊக்குவிக்கவும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நபர்களைப் பொறுப்புக்கூற வைக்கவும், பாதுகாப்புத்துறை சீர்திருத்தத்தை முன்னெடுக்கவும், நீதி மற்றும் நல்லிணக்கத்தைத் தொடர அதன் பிற கடமைகளை ஆதரிக்கவும் இலங்கை அரசாங்கத்தை அமெரிக்கா கேட்டுக்கொள்கின்றது என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘போர்க்குற்றவாளி’ சவேந்திர சில்வா அமெரிக்காவுக்குள் நுழையத் தடை!

Today rasi palan 15.02.2020 Saturday – இன்றைய ராசிப்பலன் 15 பெப்ரவரி 2020 சனிக்கிழமை

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close