சினிமா செய்திகள்முக்கிய செய்திகள்

கோடி கோடியாய் கொடுத்தாலும் அந்த மாதிரி விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் – ஷில்பா ஷெட்டி

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு கோடிக்கணக்கில் பணம் தருவதாக கூறி ஒரு விளம்பட்ரத்தில் நடிக்க கேட்டிருக்கிறார்கள்.

எவ்வளவு கொடுத்தாலும் அந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டாராம் ஷில்பா.

இந்திய திரைப்பட உலகில் 90களில் இருந்து 2000 வரை கொடி கட்டி பறந்தவர் ஷில்பா ஷெட்டி.

இந்திய சினிமாக்களின் முன்னனி ஹீரோக்கள்ளுடன் நடித்து பிரபலமான அவர் மிஸ்டர்.ரோமியோ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அந்நாளைய இளைஞர்களை கவர்ந்தார்.

2009ல் திருமணமான பிறகு நடிப்பதை குறைத்து கொண்டார் ஷில்பா ஷெட்டி. ஆனால் சில விளம்பர படங்களிலும், யோகா குறித்த பிரச்சாரங்களிலும் மட்டும் ஈடுபட்டு வருகிறார். இவரது யோகா வீடியோ மிக பிரபலம்.

இந்நிலையில் உடல் எடையை குறைக்கும் பிட்னஸ் மாத்திரை குறித்த விளம்பரம் ஒன்றில் நடிக்க சொல்லி ஷில்பாவிடம் கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு 10 கோடி ரூபாய் அளிப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.

ஆனால் ஷில்பாவோ எவ்வளவு கோடி கொடுத்தாலும் அந்த மாதிரியான நம்பிக்கையற்ற விஷயங்களுக்கு விளம்பரம் செய்ய மாட்டேன் என கூறியிருக்கிறார்.

மேலும் இதுபற்றி கூறிய ஷில்பா “உடல் எடையை குறைக்கும் மாத்திரைகள் உடனடி பலன் தரும் என்பதெல்லாம் கேட்க நன்றாகதான் உள்ளது.

ஆனால் சத்துமிக்க உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழும் வாழ்வை எந்த மாத்திரையாலும் தர முடியாது.

இயற்கையான முறையில் யோகா, உடற்பயிற்சி செய்தாலே உடல் எடையை குறைக்கலாம்” என கூறியிருக்கிறார்.

Tags
Show More

Related Articles

Back to top button
Close