Breaking News
பிரான்ஸ் கிரேக்க பாதிரியார் மீது துப்பாக்கிச் சூடு

பிரான்ஸ் கிரேக்க பாதிரியார் மீது துப்பாக்கிச் சூடு

பிரான்ஸ் கிரேக்க பாதிரியார் மீது துப்பாக்கிச் சூடு

பிரான்ஸ் நாட்டில் உள்ள லயான் நகரத்தில் உள்ள தேவாலயத்தில், கிரேக்க நாட்டைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.

தேவாலயத்தை மூடும் பணியில் பாதிரியார் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த நபர் பாதிரியாரை துப்பாகியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

அடிவயிற்றில் 2 குண்டுகள் பாய்ந்ததால், உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதிரியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

துப்பாக்கியால் சுட்ட நபரை நேரில் பார்த்தவர்கள் கூறிய அடையாளங்களை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாகிச்சூடு நடத்திய நபர் தப்பிச் சென்றதால் இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து தெளிவான தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 29 ஆம் தேதி பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் மூன்று பேர் கழுத்து அறுத்து கொல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து மீண்டும் தேவாலயத்தில் தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் நவம்பர் 5 முதல் முழு ஊரடங்கு அமல்: போரிஸ் ஜான்சன்

About அருள்

Check Also

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம் மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்தும், ஆங் சாங் சூகியை விடுதலை செய்யக்கோரியும் …