Breaking News

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி

தமிழகத்தில், நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்க, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

மதுக்கடை திறப்புக்கு எதிராக தொடரப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்ய நாராயணா, தனி நபர் இடை வெளி, பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்தனர்.

அதேநேரம், ஆன் லைனில் பணம் செலுத்துவோருக்கு 750 மில்லி கொண்ட 2 மது பாட்டிலும், நேரடியாக பணம் செலுத்தினால் ஒரே ஒரு 750 மில்லி மது பாட்டில் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், ஒரு முறை மது வாங் கினால், ஒருவருக்கு அடுத்த 3 நாட்களுக்கு மது வழங்க கூடாது என உத்தரவிட்டனர். இதில் குளறுபடி நிகழ்ந்தால், டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

வழக்கு விசாரணையை 14ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், டாஸ்மாக் கடை திறப்பு விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக் கல் செய்ய தமிழக அரசுக்கு, உத்தரவிட்டனர்.

மதுக்கடைகளை பொறுத்தவரை, காலை 10 மணி முதல் 1 மணி வரை 50 வயதுக்கு மேற்பட்டவர்களும், 1 மணி முதல் 3 மணி வரை 40 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்களும் அனுமதிக் கப்படுவார்கள். 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு, நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 771 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிதமிழகத்தில் மேலும் 771 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

Today rasi palan 07.05.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 07 மே 2020 வியாழக்கிழமைToday rasi palan 07.05.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 07 மே 2020 வியாழக்கிழமை

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …