Thursday , December 13 2018
Home / Cinema News / ராஜாவுக்கு ரெட் கார்டா?க்ரீன் சிக்னல் காட்டிய உலகநாயகன்

ராஜாவுக்கு ரெட் கார்டா?க்ரீன் சிக்னல் காட்டிய உலகநாயகன்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் முக்கிய கேரக்டரில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 1996ம் ஆண்டு கமல்-ஷங்கர் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் சுதந்திர போரட்டத்துக்கு பின், நாட்டில் ஊடுருவிய ஊழலை மையமாகக் கொண்டு உருவானது. இந்த திரைப்படம் அப்போதே ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு தற்போது செட் அமைக்கும் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்க நடிகர் சிம்புவுக்கு ரெட் கார்ட் கொடுக்க தயாரிப்பாளர்கள் சங்க தரப்பு முடிவெடுத்திருப்பதாக கூறப்படும் நிலையில், ‘இந்தியன் 2’ படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக தொடங்கியுள்ள நடிகர் சிம்பு, சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்துக்கு பின் அடுத்தடுத்து சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ள சிம்பு, தற்போது ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கவிருப்பதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் நாயகியாக நடிக்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிடம் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததால், காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

எனினும், இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளது மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய தினபலன் 13 டிசம்பர் 2018 வியாழக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 13-12-2018, கார்த்திகை 27, வியாழக்கிழமை, சஷ்டி திதி இரவு 01.49 வரை பின்பு வளர்பிறை சப்தமி. அவிட்டம் …