Thursday , December 13 2018
Home / Headlines News / கிளிநொச்சியில் 13 வயது சிறுவன் கயிறு இறுகி பலி
கிளிநொச்சியில்

கிளிநொச்சியில் 13 வயது சிறுவன் கயிறு இறுகி பலி

கிளிநொச்சியில் 13 வயது சிறுவன் கயிறு இறுகி பலி! சவப்பெட்டி வாங்ககூட முடியாத நிலையில் குடும்பம்!

கிளிநொச்சி முழங்காவில் அன்புபுரம் பிரதேசத்தில் 13 வயது சிறுவன் கயிறு இறுகி பலியான சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதயில் உள்ள 3 பெண் சகோதரிகளிற்கு மூத்த பிள்ளையான குறித்த சிறுவன் பாடசாலை முடித்து வீடு திரும்பி இரு தங்கைகளுடன் விளையாடிக்கொண்டிருக்கையில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பெற்றோர் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

வழமைபோன்று குறிதத் பகுதயில் விளையாடுவதாகவும், வழமைபோல் இன்றும் விளையாடிக்கொண்டிருக்கையில் குறித்த பகுதியில் உள்ள கொய்யா மரம் ஒன்றில் விளையாட்டுக்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் இறுகி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் குறித்த சிறுவனின் சகோதரிகள் தாயாரிடம் தெரிவித்தபோது தாயார் குறித்த சிறுவனை பாதுகாக்க முற்பட்டார்.

எனினும் அயலவர்களின் உதவியுடன் முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதிலும் சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை முழங்காவில் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்
இக் குடும்பம் இறந்த நிகழ்வை செய்வதற்குக் கூட வசதியற்ற நிலையில் இறந்த சிறுவனது உடலை அடக்கம் செய்வதற்கு பெட்டி வாங்குவதற்கு கூட பணம் இல்லாத நிலையில் ஊரவர்கள் சேர்ந்து அங்கிருக்கும் பலகைகளைக் கொண்டு பெட்டி தயாரிக்கும் சோகமான சம்பவமும் எமது பிராந்திய செய்தியாளரின் கமராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய தினபலன் 13 டிசம்பர் 2018 வியாழக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 13-12-2018, கார்த்திகை 27, வியாழக்கிழமை, சஷ்டி திதி இரவு 01.49 வரை பின்பு வளர்பிறை சப்தமி. அவிட்டம் …