Breaking News
நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க உள்ள சிவநேசத்துறை சந்திரகாந்தன்

நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க உள்ள சிவநேசத்துறை சந்திரகாந்தன்

நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க உள்ள சிவநேசத்துறை சந்திரகாந்தன்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தன் இன்றைய நாடாளுமன்ற கன்னி அமர்வில் பங்கேற்க உள்ளார்.

9 ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, பிள்ளையான் நேற்றைய தினம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து கொழும்புக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துறை சந்திரகாந்தன், இன்று இடம்பெறவுள்ள நாடாளுமன்ற கன்னி அமர்வில் பங்கேற்க, மட்டக்களப்பு மேல்நீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது.

இதற்கமைய, 9 ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் சிவநேசத்துறை சந்திரகாந்தன் பங்கேற்க உள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில், சந்தேகத்தின்பேரில் கடந்த 2015ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட அவர், 4 ஆண்டுகளுக்கும் அதிக காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நான்கு நாடுகளிலிருந்து 745 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

வணிக நடவடிக்கைகளை 70 சதவீதம் உள்ளூர்மயமாக்கும் திட்டம் – அமைச்சகம் தெரிவிப்பு

About அருள்

Check Also

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது அமெரிக்காவில் வருகிற 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி குடியரசு …