Breaking News

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் இதுவரையில் 8657 முறைப்பாடுகள்

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் இதுவரையில் 8657 முறைப்பாடுகள்

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் இதுவரையில் 8 ஆயிரத்து 657 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு ஆயிரத்து 566 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அத்துடன். மாவட்ட தேர்தல் முறைப்பாடுகள் முகாமைத்துவ மத்திய நிலையங்களுக்கு 7 ஆயிரத்து 91 முறைப்பாடகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பொதுத் தேர்தல் இடம்பெற்ற நேற்றைய தினம், ஆயிரத்து 53 முறைப்பாடுகள் பதிவானதாக தேர்தல்கள்; ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவற்றுள் 288 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முறைப்பாடுகள் முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும், 765 முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைப்பாடுகள் முகாமைத்துவ மத்திய நிலையங்களுக்கும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேநேரம், நேற்றைய தினம் தேர்தலுடன் தொடர்புடைய 72 முறைப்பாடுகள் காவல்துறை தலைமையத்திலும் பதிவாகியுள்ளன.

குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் கட்சிகளின் ஆதரவாளர்கள் 82 கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 19 வாகனங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

யாழ் தேர்தல் தொகுதி முடிவு

About அருள்

Check Also

விளக்கம் கோரவுள்ளதாக சசிகலா ரவிராஜ் தெரிவிப்பு

விளக்கம் கோரவுள்ளதாக சசிகலா ரவிராஜ் தெரிவிப்பு ‘ விருப்பு வாக்கு தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட …