Breaking News
வீரமரணமடைந்த பழனியின் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

வீரமரணமடைந்த பழனியின் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

வீரமரணமடைந்த பழனியின் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

லடாக் பகுதியில் இந்தியா-சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் வீரமரணம் அடைந்த ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த பழனியின் உடல் , ராணுவ விமானம் மூலம் இரவு 11 :20 மணிக்கு மதுரை விமான நிலையம் வ ந்தடைந்தது. இதை தொடர்ந்து, பெட்டியில் வைக்கப்பட்ட அவரது உடலில் , தேசிய கொடி போர்த்தி , ராணுவ வீரர்கள் விமான நிலைய முகப்பில் கொண்டு வந்து வைத்தனர்.

அதை தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சியர் T.G. வினய், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து மதுரை தொகுதி M.P. சு.வெங்கடேசன் , திருப்பரங்குன்றம் M.L..A., சரவணன், மதுரை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் , தென் மண்டல ஐ.ஜி . சண்முகராஜேஸ்வரன், S.P. மணிவண்ணன், முப்படை உயர் அதிகாரிகள், உள்ளிட்ட அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின் இரவு 11:50 மணிக்கு, ராமநாதபுரம் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் தலைமையில், ஆம்பலன்சில் இராணுவ அதிகாரிகள், வீர மரணம் அடைந்த பழநியின் உடலை இராமநாதபுரத்தில் உள்ள அவரது சொந்த ஊரான கடுக்கலூ ர் சென்றடைந்தது .

ராணுவ வீரர் பழனியின் உடலுக்கு சொந்த ஊரில் இறுதி அஞ்சலி நடைபெற்றது. அப்போது 21 குண்டுகள் முழங்க பழனினியின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜனாதிபதி வழங்கவுள்ள மேலும் ஒரு சலுகை

About அருள்

Check Also

தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி தமிழக அரசு முதல் கட்டமாக 6 லட்சம் அரசு, …