மரு‌த்துவ‌ குறிப்புகள்முக்கிய செய்திகள்

சில பயனுள்ள அற்புத இயற்கை மருத்துவ குறிப்புகள்

சில பயனுள்ள அற்புத இயற்கை மருத்துவ குறிப்புகள்

நிலவேம்பு இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து 30 கிராம் பொடியுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை கால் லிட்டர் அளவுக்கு வற்றவைத்து கஷாயமாக குடித்தால் தீராத காய்ச்சலும் தீரும்.

நீரிழிவு நோயாளிகள் தினமும் கோவைக்காயை சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். அனைத்துக் கடைகளிலும் மிக எளிதாகக் குறைந்த விலையில் கிடைக்கும் கோவைக்காய் நார்ச்சத்து நிரம்பியது அதை சமைத்தும் பச்சையாகவும் சாப்பிடலாம்.

உடல் உஷ்ணத்தால் உள்ளுறுப்புகள் பாதிப்படையும்போது அடிக்கடி விக்கல் ஏற்படும். அரை ஸ்பூன் கருஞ்சீரகத்தை மோருடன் சுவைத்து பருகிவர குணமாகும்.

மற்ற பழங்ளைக் காட்டிலும் அத்திப் பழத்தில் 2 முதல் 4 மடங்கு அதிகமாக தாது உப்புகளும், சத்துப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன.

இளம் பிரண்டையை நெய்யில் வதக்கி புளி, உப்பு, மிளகாய், கடுகு, பெருங்காயம், உளுந்து சேர்த்து சட்னியாக அரைத்து மாதம் ஒருமுறை நெய்யுடன் கலந்து சாப்பாட்டில் பிசைந்து சாப்பிட்டுவந்தால் வயிற்றுக் கிருமிகள் அனைத்தும் இறந்து வெளியேறிவிடும்.

பத்து இலந்தை இலைகளுடன் ஐந்து மிளகு இரண்டு பூண்டுப்பல் சேர்த்து அரைத்து மாதவிடாய் ஆகும் மூன்று நாட்களும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வேண்டும். இவ்வாறு மாதாமாதம் சாப்பிட்டுவர கருப்பையிலுள்ள குறைபாடுகள் நீங்கி கருத்தரிக்கும்.

சிறுநீரக கல்: சிறுபீளை வேர், நெருஞ்சில் சமூலம், பேராமுட்டிவேர், மாவிலங்கம் பட்டை தலா 10 கிராம் எடுத்து அரை லிட்டர் நீரில் சுண்ட காய்ச்சி காலை, மாலை நூறு மிலி வீதம் குடித்துவரவேண்டும்.

தினமும் ஐம்பது கிராம் வெங்காயத்தை பச்சையாக உண்டுவந்தால் இதய நோய்கள் நம்மை விட்டு ஓடிவிடும்.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close