சினிமா செய்திகள்முக்கிய செய்திகள்

‘தர்பார்’ படத்துடன் இணைந்து வெளியாகும் ‘சூரரை போற்று

சூர்யா ரசிகர்கள் உற்சாகம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படத்தை நாளை மறுநாள் திரையரங்குகளில் பார்க்க செல்லும் சூர்யா ரசிகர்களுக்கு பெரிய திரையில் சூர்யாவின் ’சூரரைப்போற்று’ படத்தின் டீசரை பார்க்கும் வாய்ப்பு கிடைக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

‘சூரரைப்போற்று’ திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் தற்போது டுவிட்டர் இணையதளத்தில் டிரெண்டிங்கில் உள்ள நிலையில் இந்த டீசரை வரவேற்க சூர்யா ரசிகர்கள் தயாராக உள்ளனர்

இந்த நிலையில் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ‘தர்பார்’ படம் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் இடைவேளையின்போது சூர்யாவின் சூரரைப்போற்று படத்தின் டீசரை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிஉள்ளது.

தமிழகத்தில் உள்ள ஒரு சில முக்கிய திரையரங்குகளுக்கு ‘சூரரை போற்று’ டீசர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்த செய்தி சூர்யாவின் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி என்றும் கூறப்படுகிறது
முன்னதாக ‘தர்பார்’ படத்துடன் ’பட்டாஸ்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்று கூறப்பட்டது.

ஆனால் தற்போது சூரரைப்போற்று படத்தின் டீசர் வெளியாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தர்பார்

Tags
Show More

Related Articles

Back to top button
Close