சினிமா செய்திகள்முக்கிய செய்திகள்

தர்பார் இடைவெளியில் ரசிகர்களை சந்திக்கும் சூர்யா!

தர்பார் திரைப்படத்துக்கு இடையே ரசிகர்களை சந்திக்க இருக்கிறார் சூர்யா.

ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டண்யில் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ள படம் தர்பார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக இந்தப் படத்தில் நடித்திருப்பதால் படத்தின் முதல்நாள் முதல் காட்சியைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் திரையரங்குகளில் குவிந்தனர். ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துக்கும் பஞ்சமில்லை.

ரஜினி ரசிகர்களின் கொண்டாட்டத்தில் சூர்யா ரசிகர்களும் பங்கு கொள்ளும்படியான ஒருவாய்ப்பை சூரரைப் போற்று படத்தை விநியோகம் செய்யும் சக்தி ஃபிலிம் பேக்டரி அறிவித்துள்ளது.

தர்பார் வெளியாகும் குறிப்பிட்ட திரையரங்குகளில் படத்தின் இடைவேளையின் போது சூர்யாவின் சூரரைப்போற்று டீசர் வெளியாகும் என்பதுதான் அந்த அறிவிப்பு. இதனால் சமீபத்தில் வெளியான சூரரைப் போற்று டீசரை பெரிய திரையில் பார்த்து ரசித்துள்ளனர் அவரது ரசிகர்கள்.

தர்பார் படத்தைப் பார்த்து ரசித்த ரசிகர்களில் பெரும்பாலானோர் படத்தின் முதல் பாதி சிறப்பாக இருப்பதாகவும், இரண்டாவது பாதி கதையில் தொய்வு இருப்பதாகவும் கலவையான விமர்சனங்களைத் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஈரான் மீது தாக்குதல் இல்லை

இணையத்தில் வெளியானது தர்பார்…

Subscribe to our channel

Tags
Show More

Related Articles

Back to top button
Close