இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

திசை மாறும் ரஞ்சனின் ஒலிப்பதிவுகள்! – அமைச்சர்கள் பதற்றம்

- மஹிந்தவுக்கு அழுத்தம்

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நீதிபதிகள், முக்கிய அரச அதிகாரிகள் மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகளுடனான ரஞ்சன் ராமநாயக்க எம்.பியின் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவுகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் தற்போது மேலும் ஒலிப்பதிவுகள் வராமல் தடுப்பதற்குப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய அரசின் ஒரு சில அமைச்சர்களின் மனைவியர் மற்றும் நெருங்கியவர்கள், குறிப்பாக பெண்களுடனான ரஞ்சனின் உரையாடலினால் இந்த நிலைமை தோன்றியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், ரஞ்சன் தரப்பிலேயே அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என்று விமல் வீரவன்ச தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

Back to top button
Close