Breaking News

ஸ்பெயின் பிரதமரின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு

ஸ்பெயின் பிரதமரின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 145-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 5 ஆயிரத்து 600 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. ஐரோப்பிய நாடான ஸ்பெயினிலும் கொரோனா வைரஸ் புரட்டி எடுத்துவருகிறது.

ஸ்பெயின் நாட்டில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 193 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 6 ஆயிரத்து 250 பேருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்துவரும் நிலையில் ஸ்பெயின் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் அத்தியவசிய காரணங்கள் இல்லாமல் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்-ன் மனைவி பெகோனா கோம்ஸ்க்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவல் ஸ்பெயின் நாட்டின் பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், கோம்ஸ் இருவரும் நலமாக உள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …