Monday , December 17 2018
Home / Headlines News / கருணாஸை பிடிக்க தனிப்படை அமைப்பு
கருணாஸை

கருணாஸை பிடிக்க தனிப்படை அமைப்பு

காவல்துறை அதிகாரியை தரக்குறைவாக பேசிய கருணாஸை பிடிப்பதற்கு 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் முதல்வரையும், தி.நகர் துணை கமிஷனர் அரவிந்த்தையும் மிகவும் தரக்குறைவாகவும் அவதூறாகவும் பேசினார். அவரது பேச்சு கடும் கண்டனங்களை எழுப்பியது. அதனையடுத்து அவர் மீது நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் தலைமறைவாகிவிட்டார் என கூறப்பட்டது. இந்நிலையில், தலைமறைவான கருணாஸை பிடிப்பதற்கு 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. ஆனால் நான் தலைமறைவாகவில்லை வீட்டில்தான் இருக்கிறேன் என கருணாஸ் விளக்கமளித்துள்ளார்.

Check Also

இந்திய

என்னது ரூ.1000 கோடியா…? 2.0 கலெக்‌ஷன் அப்டேட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாணட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அனைவராலும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 2.0 திரைப்படம் நவம்பர் மாதம் …