Home / விளையாட்டு

விளையாட்டு

உலக கோப்பை 2019: இன்று மோதும் அணிகள்

உலக கோப்பை 2019

லண்டனில் உலகக்கோப்பை போட்டிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. நேற்றைய போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணியும், பாகிஸ்தானும் மோதின. இதில் வெஸ்ட் இண்டிஸ் அபார வெற்றி பெற்றது. இன்று ஒரே நாளில் இரு வேறு ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் இலங்கை அணியும், மாலை 6 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் ஆஸ்திரேலியாவும் மோத இருக்கின்றன.

Read More »

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த தல தோனி!

டாஸ்

இன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான இரண்டாவது பிளே ஆஃப் போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் வழக்கம்போல் இந்த முறையும் தலதோனி டாஸ் வென்றார். இதனையடுத்து தனது அணி பந்துவீசும் என்று அவர் அறிவித்தார். எனவே இன்னும் சில நிமிடங்களில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது இன்றைய சிஎஸ்கே அணியில் வாட்சன், டூபிளஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, தோனி, பிராவோ, ஜடேஜா, …

Read More »

46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி.

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான 44-வது லீக் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் …

Read More »

தாயகம் திரும்பும் ‘தங்க மங்கை’ கோமதி.

ஆசிய தடகள போட்டியில் சாதித்த ‘தங்க மங்கை’ கோமதி இன்று தாயகம் திரும்புகிறார். ஆசிய தடகளத்தில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை கோமதி, திருச்சி அருகே உள்ள முடிகண்டம் கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தையான விவசாய கூலித்தொழிலாளி மாரிமுத்து கடந்த 2016-ம் ஆண்டு இறந்துவிட்டார். தாயார் ராஜாத்தி, அண்ணன் சுப்பிரமணி ஆகியோருடன் வசித்து வரும் கோமதி ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். சாதனைக்கு …

Read More »

ராஜஸ்தான் 4 விக்கெட்டுக்களினால் வெற்றி.

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. 12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 43 ஆவது லீக் போட்டி கொல்கத்தா கினைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையே கொல்கத்தாவில் இன்றிரவு 8.00 மணிக்கு ஆர்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்துள்ள நிலையில் கொல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கி 175 ஓட்டங்களை குவித்தது. 176 ஓட்டம் …

Read More »

உலகக்கோப்பை 2019 – பாகிஸ்தான் அணி அறிவிப்பு !

பாகிஸ்தான் அணி

அடுத்தமாதம் தொடங்க இருக்கும் உலகக்கோப்பைப் போட்டிக்கான பாகிஸ்தான் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை போட்டிகள் அடுத்த மாதம் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்க இருக்கின்றன. இதற்காக அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் அணியைத் தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளனர். நியுசிலாந்து , ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய நாடுகள் தங்கள் உலகக்கோப்பை அணியை அறிவித்து விட்டன. உலகக்கோப்பைக்கான அணியை அறிவிக்க கடைசி நாள் …

Read More »

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கைது!

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன பொரளைப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார். மதுபோதையில் வாகனத்தை செலுத்தி வந்து, கிங்ஸி வீதியில் விபத்தொன்றை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழே அவர் கைதுசெய்யப்பட்டார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் பிணையில் விடுவிப்பு எனினும், விசாரணைகளின் பின்னர் அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Read More »

மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் இலங்கையை வீழ்த்தியது தென்னாபிரிக்கா!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்கா அணி 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. டர்பன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்து. இதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 331 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. தென்னாபிரிக்கா அணி சார்பில் டி கெக் 121 ஓட்டங்களைப் …

Read More »

குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்கிறேன்! – சனத் ஜயசூரிய தெரிவிப்பு

தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்வதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் எதிர்ப்பு விசாரணைகளுக்கு ஒத்துழைக்காமையைத் தொடர்ந்து சனத் ஜயசூரியவுக்கு இரண்டு வருடங்களுக்கு கிரிக்கெட்டுடன் தொடர்புடைய விடயங்களில் செயற்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபையால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் இரண்டு சரத்துக்களை மீறியமை தொடர்பிலேயே அவருக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், …

Read More »

சனத் ஜயசூரியவுக்கு கிரிக்கெட் நடவடிக்கையில் ஈடுபடத் தடை!

இலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரியவுக்கு அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு இரண்டு வருடங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபையால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கட் சபையின் ஊழல் ஒழிப்பு சட்டத்தின் இரண்டு சரத்துக்களை மீறியமை தொடர்பிலேயே அவருக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read More »