Breaking News
கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்கள்....!

கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்கள்….!

கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்கள்….!

நாட்டில் நேற்றைய தினம் 23 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 18 பேருக்கும் சென்னையில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும் துருக்கியில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் இந்தோனேசியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் குவைத்திலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் நேற்று தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 941 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 24 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் தொற்றுறுதியான 2 ஆயிரத்து 789 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

இந்தநிலையில் தொற்றுறுதியான 141 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் கொரோனா தொற்றால் எற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை என்பதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக காணப்படுகின்றது.

19 வது அரசியலமைப்பு நீக்கப்பட வேண்டும் ..!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா  தொற்று அதிகரிப்பு

About அருள்

Check Also

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை - எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை – எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை – எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு முன்னாள் …